Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவின் காய்கறி உற்பத்தி 5% உயர்வு!

Advertiesment
இந்தியா
, செவ்வாய், 8 மார்ச் 2011 (20:14 IST)
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் காய்கறி உற்பத்தி கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 5 விழுக்காடு உயர்ந்து 14.1 கோடி டன்களை எட்டியுள்ளது என்று நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட வினா ஒன்றிற்கு பதிலளித்த வேளாண் துணை அமைச்சர் அருண் யாதவ், 2009-10ஆம் ஆண்டில் 13.3 கோடி டன்களாக காய்கறி உற்பத்தி இருந்தது என்று கூறியுள்ளார்.

இந்த நிதியாண்டில் வெங்காயம், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், கோசு, காலிபிளவர், பட்டாணி, வெண்டைக்காய் ஆகியவற்றின் சாகுபடி அதிகரித்துள்ளது என்று கூறிய அமைச்சர் அருண் யாதவ், வெங்காயத்தின் உற்பத்தி மட்டும் 6 விழுக்காடு உயர்ந்து 1.29 கோடி டன்களாக அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார். இது கடந்த ஆண்டு 1.22 கோடி டன்களாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

வெங்காய உற்பத்தி 6 விழுக்காடு அதிகரித்திருந்தும் அதன் விலை இடைக்காலத்தில் ரூ.80 வரை உயர்ந்தது எதனால் என்பதை அமைச்சர் விளக்கவில்லை.

உருளைக்கிழங்கு உற்பத்தி 4 விழுக்காடு உயர்ந்து 3.80 கோடி டன்களாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு 3.43 கோடி டன்களாக இருந்துள்ளது என்றும் அரசு கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil