Publish Date: Wed, 23 Dec 2015 (13:39 IST)
Updated Date: Thu, 24 Dec 2015 (18:20 IST)
2015 ஏப்ரல் 25 ஆம் நாள் நேபாளத் தலைநகர் காட்மாண்டூவில் 7.9 அளவு தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 7000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் லாம்சுங் மாவட்டத்தின் கிழக்கு-தென்கிழக்கே 15 கிமீ தூரத்தில் மையம் கொண்டிருந்த இவ்வதிர்வு 15 கிமீ ஆழத்தில் இடம்பெற்றது. 1934 நிலநடுக்கத்தின் பின்னர் நேபாளத்தில் இடம்பெற்ற மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும்.
உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானோர் நேபாளத்திலும், வேறு சிலர் அண்டை நாடுகளான இந்தியா, சீனா, வங்காளதேசம் ஆகிய நாடுகளிலும் இறந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தில் தலைநகர் காட்மாண்டூவில் பல நூற்றாண்டுகள் பழமையான யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் கட்டடங்கள் பல அழிந்தன.
Caston
Publish Date: Wed, 23 Dec 2015 (13:39 IST)
Updated Date: Thu, 24 Dec 2015 (18:20 IST)