Publish Date: Thu, 24 Dec 2015 (19:53 IST)
Updated Date: Thu, 24 Dec 2015 (20:40 IST)
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் [ஒருநாள் போட்டி] :
ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 20 போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் 37 விக்கெட்டுகளுடன் [22 போட்டிகள்] இரண்டாவது இடத்தில் உள்ளார்.
நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் 36 விக்கெட்டுகளுடன் 3ஆவது இடத்தையும், பாகிஸ்தானின் வஹாப் ரியாஸ் 32 விக்கெட்டுகளுடன் 4ஆவது இடத்தையும், இங்கிலாந்தின் ஸ்டீவன் ஃபின் 31 விக்கெட்டுகளுடன் 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் [டெஸ்ட் போட்டி] :
டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 9 போட்டிகளில் [17 இன்னிங்ஸ்] 62 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹசில்வுட் 11 போட்டிகளில் [21 இன்னிங்ஸ்] 51 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 51 விக்கெட்டுகளுடன் 3ஆவது இடத்தையும், பாகிஸ்தானின் யாசிர் ஷா 49 விக்கெட்டுகளுடன் 4ஆவது இடத்தையும், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனும், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 46 விக்கெட்டுகளுடன் 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
லெனின் அகத்தியநாடன்
Publish Date: Thu, 24 Dec 2015 (19:53 IST)
Updated Date: Thu, 24 Dec 2015 (20:40 IST)