Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துருக்கியில் படகுகள் மூழ்கியதில் 3 வயது அயிலன் குர்தி மரணம்

Advertiesment
அயிலன் குர்தி
2015 செப்டம்பர் 4 ஆம் தேதி துருக்கி கடற்கரையில் அய்லன் குர்தி என்ற மூன்று வயது சிறுவன் உடல் கண்டெடுக்கப்பட்டது உலகையே அதிர்ச்சி அடைய வைத்தது. அகதியாக கிரீசுக்கு செல்லும் வழியில் படகு நீரில் மூழ்கி இந்த சிறுவன் உயிரழந்தான்.


 
 
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக அந்நாட்டு மக்கள் துருக்கி வழியாக அண்டை நாடான ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்து வருகின்றனர். அப்போது, துருக்கியில் படகுகள் மூழ்கியதில் அயிலன் குர்தி உட்பட 12 பேர் துருக்கி கடற்பரப்பில் மூழ்கி உயிரிழந்தனர்.
 
மேலும், துருக்கிய கடற்பரப்பில் மூழ்கிய மூன்று வயது சிரிய நாட்டுச் சிறுவனின் புகைப்படம் உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

Share this Story:

Follow Webdunia tamil