Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நா.முத்துக்குமார் மரணத்துக்கு காரணம் காசோலைகளா? பரபரப்பு தகவல்

நா.முத்துக்குமார் மரணத்துக்கு காரணம் காசோலைகளா? பரபரப்பு தகவல்

Advertiesment
நா.முத்துக்குமார்
, திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (16:02 IST)
பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணத்துக்கு காரணம் அவரது வீட்டில் காசோலைகள் பணம் ஆகாததுதான் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.


 

 
கடந்த சில மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நேற்று மரணமடைந்தார். அவரது மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதுவரை தமிழ் சினிமாவில் சுமார் 1500 மேற்பட்ட பாடல்களை எழுதி அவருக்கென்று ஒரு நீங்கா இடத்தை பிடித்து வைத்திருந்தார்.
 
மஞ்சள் காமாலை நோய் பாதிக்கப்பட்டிருந்த நா.முத்துக்குமாரின் சகிச்சைக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் வரை தேவைப்பட்டதாம். அந்த தொகையை தாயார் செய்ய முடியாமல் போனதுதான் நா.முத்துக்குமார் உயிரிழப்பு காரணம் என்றும் அவரது வீட்டு அலமாரியில் சம்பளமாக வாங்கிய ரூ:70 லட்சம் மதிப்புள்ள காசோலைகள் பணமாக மாறாமல் வெற்று காகிதமாக இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.
 
அவரை பயன்படுத்திக்கொண்ட பலர் அவருக்கு முறையாக சம்பளத்தை கொடுக்க தவறியதால் தான் அவர் உயிரிழந்தார் என்றும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நா.முத்துக்குமார் மரணத்திற்கு முன் மகனுக்கு எழுதிய உருக்கமான கடிதம்