திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் முக.முத்து தற்போது கவனிக்க யாருமின்றி, உடல் நலம் பாதிக்கப்பட்டு நண்பர் ஒருவரின் வீட்டில் அடைக்கலம் புகுந்துள்ள அவலம் எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கருணாநிதியின் மூத்த மகன் ஒரு மு.க.முத்து ஒரு காலத்தில் சினிமாவில் கதாநாயகனக கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்டு சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். இவர், எம்.ஜி.ஆருக்கு போட்டியாக இறக்கப்பட்டார் என்ற கருத்தும் உண்டு. எம்.ஜி.ஆரைப் போலவே உடை,அலங்காரம்,உடல் மொழி எல்லாமும் இருக்கும். இவர் ஒரு பாடகரும் கூட..
குடும்ப கஷ்டத்தால் இவர் சில வருடங்களுக்கு முன் ஜெயலலிதாவை சந்தித்து நிதிஉதவி கேட்டார். அதனால் கோபமடந்த கருணாநிதியின் குடும்பத்தினர் அவரை ஒதுக்க ஆரம்பித்ததாக தெரிகிறது. சென்னையில் வசித்த அவர், கருணாநிதி குடும்பம் இவரை முற்றிலும் கைவிட்டு விட்ட நிலையில் திருவாரூரில் வசித்து வந்தார்.
தற்போது நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வரும் இவரை, அரசு மருத்துவமனையில் சாதாரண நோயாளி போல வைத்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரை அங்கு குணப்படுத்த முடியவில்லை. அதனால், அவரை சென்னைக்குக் அழைத்து வந்து நண்பர்கள் கொடுத்த பணத்தை வைத்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். அதற்குப் பிறகு உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும், தொடர்ந்து தேவையான சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருக்கிறார்.
இந்நிலையில், அவரை எங்கு வைத்து சிகிச்சை பார்ப்பது என்று தவித்துக் கொண்டிருக்கிறார் அவரது மனைவி சிவகாம சுந்தரி. அவர்களின் நிலையைக் கண்டு பரிதாபம் அடைந்த அவரின் நண்பர் ஒருவர் தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளாராம். "கோபாலபுரம்" கைவிட்டு விட்ட நிலையில் நண்பரின் அடையாறு இல்லத்தில் தங்கியுள்ளார் மு.க.முத்து.
கருணாநிதி குடும்பத்தார் சகல வசதிகளோடு வாழ்ந்து வரும் நிலையில் அவருடைய மூத்த மகன் இப்படி சென்னையில் அனாதை போல கைவிடப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.