4 பில்லியன் ஆண்டுகளாக சுருங்கும் புதன் கிரகம்
Publish Date: Tue, 18 Mar 2014 (15:31 IST)
Updated Date: Tue, 18 Mar 2014 (15:29 IST)
சூரியனுக்கு மிக அருகே இருக்கும் புதன் கிரகம் படிப்படியாக சுருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
அனைத்து கிரகங்களிலும் மிக சிறியதாக கருதப்படும் புதன், சூரியனுக்கு மிக அருகே இருக்கும் கிரகமாகும். சூரியனிலிருந்து சுமார் 36 மில்லயன் மைல்கள் தொலைவில் இருக்கும் இக்கிரகம் படிப்படியாக சுருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.1974
மற்றும் 1975 ஆம் ஆண்டு புதன் கிரகத்திற்கு மேல் நாசாவின் Mariner 10 விண்கலம், செலுத்தப்பட்டபோது அது எடுத்த புகைப்படத்திலேயே அக்கிரகம் சுருங்கியதற்கான ஆதாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாசாவின் MESSENGER விண்கலம் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு புதன் கிரகத்தை புகைப்படம் எடுத்ததில் அது படிப்படியாக சுருங்கி வருவது உறுதி செய்யப்பட்டது.