Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'செக்ஸ்'க்கு வியாழக்கிழமை சிறந்ததாம்!

Advertiesment
செக்ஸ்
, வெள்ளி, 17 பிப்ரவரி 2012 (16:41 IST)
செக்ஸ்' வைத்துக்கொள்ள 'மூட்'தான் முக்கியம்;யாரும்...எப்ப வேணாலும் அதை வைத்துக்கொள்ளலாம் என்று செக்ஸாலஜிஸ்டுகள் ஒருபுறம் அடித்துக் கூறினாலும், வியாழக்கிழமை கால வேளைதான் "அது"க்கு சிறந்த தினம் என கண்டுபிடித்துள்ளனர் ஆய்வாளர்கள்!

வெளிநாட்டுக்காரங்களுக்குத்தான் எதெதற்கு ஆய்வு நடத்தலாம் என்பது குறித்து ஒரு வரைமுறையே கிடையாதே...! அந்த வகையில் 'லண்டன் ஸ்கூல் ஆப் எக்கானமிக்ஸ்' நடத்தியுள்ள ஆய்வில்தான் இந்த அரிய(!?) தகவல் தெரியவந்துள்ளது.

அதாவது வியாழக்கிழமை காலை வேளைகளில்தான் ஆணுக்கும், பெண்ணுக்கும் செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் 'ஹாரிஸ்டல்' - Coristal- அளவு அதிகமாக சுரக்கிறதாம்.

மேற்படி கிழமையில் ஆண்களுக்கு செக்ஸ் 'மூட்'ஐ கிளப்பும் 'டெஸ்டாஸ்டெரோன்'- Testosterone- அதிகமாக சுரப்பதைப்போன்று பெண்களுக்கும் அந்த 'மூட்'ஐ கிளப்பும் 'ஆஸ்ட்ரோஜன்' - oestrogen - ஐந்து மடங்கு அதிகமாக சுரக்குமாம்!

எனவே அன்றைய தினம் அதிகாலை எழுந்து, - கும்பகர்ண பார்ட்டிகள் அலாரம் வைத்து - மேற்படி காரியத்தை தொடங்கலாம்!

இந்த ஆய்வை லண்டனிலிருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வு எந்த அளவுக்கு உண்மையோ தெரியாது.ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த செக்ஸாலஜிஸ்ட் ஒருவர்,"வேண்டுமானால் வாரத்தின் மத்தியில் வியாழக்கிழமை வருவதால் அன்றைய தினம் அலுவலக மற்றும் இதர டென்ஷன்கள் ஓய்ந்து இருக்கும் என்பதால்,மனம் '"அது"க்கு நாடலாம்!" என்று காரணகாரியங்களை கூறுகிறார்!

வேண்டுமானால் நீங்களும் முயற்சித்து பாருங்களேன்...!

Share this Story:

Follow Webdunia tamil