Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒலிம்பிக் வரலாறு

Advertiesment
ஒலிம்பிக் வரலாறு Olympic 2008
இதமாகவும் ஒலிப்பிழம்பாகவும் பகல் பொழுதில் விண்ணில் மின்னும் சூரியனைவிட நட்சத்திரம் ஏதுமில்லை. அதுபோல இவ்வுலகில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையான போட்டி என்று ஏதுமில்லை,

25 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கவிதை படைத்த கிரேக்க கவிஞர் பின்டார் ஒலிம்பிக் போட்டிகளின் பெருமையை இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த கவிஞர் கூறியதைவிட ஒலிம்பிக் போட்டிகளின் தொன்மை பெருமையை வேறு எவராலும் கூற முடியாது.

இன்று நேற்றல்ல, 27 நூற்றாண்டுகளுக்கு முன்னர் துவங்கியது ஒலிம்பிக் போட்டிகள் என்றால் நம்ப முடிகின்றதா?

webdunia photoWD
ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 776 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டின் ஒலிம்பியா என்ற இடத்தில் ஒரு நாள் போட்டியாக ஒலிம்பிக் போட்டி துவங்கியது.

கிரேக்கர்களின் கடவுளாகக் கருதப்படும் ஜீயஸ் மற்றும் ஹேரா ஆகியோரை வழிபட்டு அவர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு விழாவாக ஒலிம்பிக் போட்டிகள் துவக்கப்பட்டது.

அந்த காலத்தில் போர்க்கலையாகவும், தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் கேளிக்கையாகவும் இருந்த சிலவற்றை தொகுத்து விளையாட்டுப் போட்டிகளாய் மாற்றி முதல் ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டதாக பழைய வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க கிரேக்க உலகத்தின் ஒவ்வொரு நகரில் இருந்தும் ஏராளமான வீரர்கள் ஒலிம்பியா நகரத்தில் குழுமியிருந்தனர். போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு அந்த காலத்தில் வெற்றியின் சின்னமாக அணிவிக்கப்படும் ஆலிவ் இலைகளினால் ஆன கிரீடம் அணிவிக்கப்பட்டு அந்த கிரீடத்துடன் பெருமையாக தங்கள் நகர்களுக்கு திரும்பியுள்ளனர். அவர்களையே "ஹீரோ" என்று அழைத்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். திருமணமான பெண்கள், போட்டியில் பங்கேற்கவோ, பார்க்கவோ அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பணிப்பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்த டிமட்டர் ஆலயத்தின் தலைமை பெண் பூசாரி 2வது உயர்ந்த இருக்கையில் அமர்த்தப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்றாலும், ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையாக பெண்கள் மட்டுமே பங்கேற்று அவர்களுடைய திறனை வெளிப்படுத்த ஹேரேயா போட்டிகள் என்று தனியாக நடத்தப்பட்டது. கிரேக்க கடவுளான ஜீயசின் மனைவி ஹேரா பெயரால் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.

webdunia
webdunia photoWD
அன்றைய ஒலிம்பிக்கில் மல்யுத்தம், ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், எடை மிகுந்த கல்லை எறிதல் ஆகியவற்றுடன் இன்று வரை பிரபலமாக இருக்கும் மராத்தன் போட்டி என்றழைக்கப்படும் நீண்ட தூர ஓட்டப்பந்தயம் நடந்துள்ளன.

முதலில் ஒரு நாள் மட்டுமே நடத்தப்பட்ட போட்டியாக இருந்த ஒலிம்பிக்ஸ், பிறகு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பல நாள் போட்டியாக நடத்தப்பட்டுள்ளது. காலத்தின் போக்கின் ஒரு அடையாளமாக 4 ஆண்டுக்கு ஒரு முறை இப்போட்டிகள் நடத்தப்பட்டதாக கிரேக்க வரலாறு கூறுகிறது.

இப்போட்டிகள் நடைபெறும்பொழுது எந்த வன்முறையும், போரும் நடைபெறக் கூடாது என்பதில் அதீத கட்டுப்பாடும், கவனமும் செலுத்தப்பட்டுள்ளது.

webdunia
webdunia photoWD
ஒலிம்பிக் போட்டி துவங்குவதற்கு முன்னர், ஒலிம்பியா நகரில் இருந்து 3 ஸ்போன்டோஃபோராய் என்று அழைக்கப்படும் ஈலிஸ் நகர குடிமக்கள் ஆலிவ் இலைகளுடனான கிரீடம் அணிந்து ஒரு மாத காலத்திற்கு கிரேக்கம் முழுவதும் சுற்றி வருவர். அவர்கள் புறப்பட்டதற்கு பிறகு புனிதமான அமைதியும், சமாதானமும் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பது வழமையாக இருந்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளைக் காண வரும் ரசிகர்கள் எவரும் எந்த வித பாதிப்புகளுக்கும் உள்ளாகக் கூடாது என்றும், எந்தவொரு வன்செயலும் கிரேக்க கடவுளான ஜீயசுக்கு எதிரானதாகவே கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

webdunia
webdunia photoWD
ஒலிம்பிக்கின் எல்லா போட்டிகளும் ஒலிம்பியா நகரில் உள்ள மாபெரும் விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது. 40,000 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய மாபெரும் விளையாட்டரங்காக திகழ்ந்த அந்த அரங்கு கிறிஸ்து பிறப்பதற்கு முன் 4வது நூற்றாண்டு வரை இருந்ததாக ஆவணங்கள் கூறுகின்றன.

அன்றைய ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டவர்களை ஆத்லோஸ் (ஹவாடடிள) என்று அழைத்தனர். அதுதான் ஆங்கிலத்தில் இப்பொழுது அத்லெட்ஸ் (ஹவாடநவள) என்று அழைக்கின்றனர். மேலோர் கீழோர் என்று ஒதுக்காமல், எல்லோரும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். உதாரணத்திற்கு மெகாரவைச் சேர்ந்த ராணுவ தளபதியும், பாலிம்னிஸ்டர் என்கின்ற ஆடு மேய்ப்பவரும், ரோட்ஸ் எனும் அரச குடும்பத்தைச் சேர்ந்த டயாகுராஸ் என்பவரும், பாசிடோனிய அரசர் அமின்டாஸ் என்பவரின் மகனும், அவருக்கு பிறகு பேரரசராக திகழ்ந்த அலெக்சாண்டரும், டெமாக்ரைட்டர்ஸ் என்ற தத்துவ ஆசிரியரும் போட்டிகளில் கலந்து கொண்டதாக ஒலிம்பிக் சரித்திரம் பகர்கிறது.

மி.சி. 776 ல் துவங்கிய ஒலிம்பிக் போட்டிகள் ஏசு பிறந்ததற்கு பிறகு (ஏ.டி.) 393ஆவது ஆண்டு வரை நடைபெற்று வந்துள்ளது.

1169 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டிகளை கிரேக்க அரசராக 399ம் ஆண்டில் பொறுப்பேற்ற தியோடோசியஸ், விளையாட்டை மதநம்பிக்கை அற்றவர்களின் கலாச்சாரம் என்று கூறி ஒலிம்பிக் போட்டிகளை தடை செய்தார்.

ஒலிம்பிக் போட்டிகள் நடந்த ஒலிம்பியா நகரமும், போட்டிகள் நடத்தப்பட்ட அற்புத அரங்கும் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து யாரும் கண்டுகொள்ளாத இடங்களாயின. 1766ம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொல்லியலாளர் எர்னஸ்ட் கர்டியஸ் என்பவர் ஒலிம்பியா நகரை புதுப்பித்து அதன் பாரம்பரிய தொன்மையை காப்பாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக இன்று அந்த நகரமும், பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்ட அந்த அரங்கமும் வரலாற்றின் சிதைந்த சிதிலங்களாக
webdunia
webdunia photoWD
சுற்றுலாப் பயணிகள் செல்லும் இடமாக காட்சியளிக்கின்றது.

அன்று ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்ட மைதானம் இன்று சர்வதேச ஒலிம்பிக் இயக்கத்தின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யும் ஒலிம்பிக் கழக கட்டிடம் இயங்கும் இடமாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil