Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.பி.எஸ் அணியில் இணைந்த 1000 தேமுதிகவினர் - விஜயகாந்த் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (13:42 IST)
சென்னையை சேர்ந்த ஏராளமான தேமுதிகவினர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்துள்ளனர்.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் போர்க்கொடி தூக்கிய பிறகு அவருக்கு இதுவரை அதிமுக எம்.எல்.ஏக்கள் 10 பேர், அதிமுக எம்.பி 11 பேர், அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகளான பொன்னையன், மதுசூதனன் உள்ளிட்டோர் அவரது அணியில் உள்ளனர். மேலும், ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தங்கள் பக்கம் விரைவில் வருவார்கள் என ஓ.பி.எஸ் அணி நம்புகிறது.
 
அந்நிலையில், மற்ற கட்சியிலிருந்தும் ஏராளமானோர் விலகி, ஓ.பி.எஸ் பக்கம் செல்வது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, கடந்த வெள்ளிக்கிழமை மதிமுகவில் இருந்து 1000 பேர் விலகி ஓ.பி.எஸ் அணியில் இணைந்தனர். 
 
இந்நிலையில், தேமுதிகவை சேர்ந்த 1000 பேர் இன்று, கிரீன்வேஸ் சாலையில் உள்ள் ஓ.பி.எஸ்-ஸின் வீட்டிற்கு நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்த விவகாரம், தேமுதிக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 வயது அரசுப் பள்ளிச் சிறுமிக்கு ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை: அண்ணாமலை கண்டனம்..!

ஆன்லைனில் புக் செய்தால் போதும்.. ஷோரூமில் இருந்து வீட்டுக்கே வரும் கார்.. புதிய வசதி..!

பழனிமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

சட்டவிரோத குடியேற்றம்! இந்தியர்களை கொண்டு வந்து விட்ட அமெரிக்க ராணுவம்! - இனி அவர்கள் நிலை என்ன?

எங்களை நாய் மாதிரி நடத்துறார்.. தளபதிய சுத்தி தப்பு நடக்குது! - புஸ்ஸி ஆனந்த் மீது தவெக நிர்வாகி குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments