Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்டம் கட்டிய ஈபிஎஸ் ஆதரவாளர்கள்.

Advertiesment
, வியாழன், 23 பிப்ரவரி 2017 (06:44 IST)
சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்து ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து ஒரே நாளில் ஹீரோ ஆனவர் ஓபிஎஸ். இவருக்கு செல்வாக்கும் நாள் ஆக ஆக அதிகரித்து கொண்டே வர, சசிகலா கூடாரத்தில் இருந்து ஒவ்வொருவராக ஓபிஎஸ் பக்கம் வந்தனர்.

 

 



எப்படியும் கட்சியும், ஆட்சியும் நம் கையில்தான் என்று நம்பிக்கையுடன் இருந்த ஓபிஎஸ் அணி, எடப்பாடி பழனிச்சாமியை கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

தற்போது ஈபிஎஸ் ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னர் உறுதியாகிவிட்டதால் பழிவாங்கும் படலனக்கள் ஆரம்பித்துவிட்டதாகவே கூறப்படுகிறது. சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது, தன்னைக் கடத்தியதாக போலீஸில் புகார் கொடுத்த எம்.எல்.ஏ சரவணன் மீதே புகார் வந்துவிட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயராம் என்பவர் சரவணன்மீது பணமோசடி புகார் கொடுத்துள்ளார். இவர் எந்த நேரத்திலும் இந்தப் புகாரால் கைது செய்யப்படலாம் என்று சொல்கிறார்கள்

இதே போல் இன்னும் ஒருசில ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது விரைவில் புகார் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு மிரட்டனால் ஓபிஎஸை தனிமைப்படுத்திவிட்டு உடனே ஈபிஎஸ் அதிமுகவில் அவர்கள் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூமியை போலவே ஏழு கோள்கள் கண்டுபிடிப்பு. வானியல் ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்