ஓபிஎஸ் அணிக்கு ஜி.கே.வாசன் ஆதரவு. அதிரடி முடிவால் திமுக அதிர்ச்சி

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (04:45 IST)
சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளரை தேர்வு செய்வதிலும், சிறு கட்சிகளின் ஆதரவை பெறுவதிலும் தீவிரமாக உள்ளது. குறிப்பாக மக்கள் நலக்கூட்டணியின் ஆதரவை பெறுவதற்கு திமுகவும் ஓபிஎஸ் அணியும் முயற்சி செய்து வருகின்றன



 


இந்நிலையில் ஜி.கே.வாசனின் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு ஆதரவு தரப்போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி ஜி.கே.வாசன் , ஓபிஎஸ் அணி வேட்பாளருக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை செய்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், ஓபிஎஸ் அணியின் வேட்பாளரை அறிவித்தவுடன் தனது முடிவை அவர் வெளிப்படையாக அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மக்களின் ஆதரவு பன்னீர்செல்வத்திற்கு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. ஜி.கே.வாசனின் இந்த அதிரடி முடிவால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தியாரின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை: கமல்ஹாசன்

கோவை விமான நிலையத்தில் கடும் கட்டுப்பாடு.. வெளியேற்றப்பட்ட தவெக தொண்டர்கள்..!

ஈரோட்டுக்கு வருபவர் பக்கத்தில் இருக்கும் கரூருக்கு வராதது ஏன்? விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள்..!

சர்க்கரை நோயின் மாத்திரைகள் தரம் குறைந்தவைகளா? திரும்ப பெற உத்தரவு..!

சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரும் ராஜ்யசபா தேர்தல்.. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments