Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலாவிடம் ஒப்புதல் பெற போயஸ் கார்டனுக்கு விரைந்த அமைச்சர்கள்

Advertiesment
சசிகலாவிடம் ஒப்புதல் பெற போயஸ் கார்டனுக்கு விரைந்த அமைச்சர்கள்
, வியாழன், 29 டிசம்பர் 2016 (10:44 IST)
அதிமுக பொதுச்செயலளாராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அவரின் ஒப்புதலை பெற அதிமுக முக்கிய அமைச்சர்கள் தற்போது போயஸ் கார்டன் சென்றுள்ளனர்.


 

 
மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதற்கான தீர்மானத்தை பொதுக்குழுவில் நிறைவேற்றியுள்ளனர்.
 
அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக இதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கிய தீர்மானமாக அதிமுக தலைமை பொறுப்பை வி.கே.சசிகலாவிடம் ஒப்படைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  மேலும், சசிகலா, வருகிற ஜனவரி 2ம் தேதி திமுக பொறுப்பேற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா கலந்து கொள்ளவில்லை எனவே, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தம்பி துரை, பொள்ளாச்சி ஜெயராமன், ராஜலட்சுமி ஆகியோர் தற்போது போயஸ் கார்டன் சென்றுள்ளனர். அவரை நேரில் சந்தித்து, பொதுக்குழுவின் முடிவை ஏற்றுக்கொள்ளுமாறு சசிகலாவை வலியுறுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா பொதுச்செயலாளர்: கதறி அழுதார் முதல்வர் பன்னீர்செல்வம்!