Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர் முத்திரை செய்வதால் என்ன பலன்கள்...?

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (16:07 IST)
நீர் முத்திரையை செய்து வந்தால், நீர்ப் பற்றாக்குறை மற்றும் அதிகக் குளிர்ச்சியால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்தும் எளிதில் தப்பிக்க முடியும். உடலில் உள்ள  நீர்ச்சத்தை சம அளவில் வைத்திருக்க உதவுவதுதான் நீர் முத்திரை.

பல வருடங்களுக்கு முன் சிக்கின் குனியாவால் வந்த முடக்குவாதம், மற்றும் மூட்டுவலி, மூட்டுக்கள் வளைதல் போன்ற பிரச்னை இருப்போர் தொடர்ந்து மூன்று மாதங்கள் இந்த முத்திரையைச் செய்துவர, பரிபூரண பலனை உணர முடியும். 
 
வலது கை பெருவிரல் நுனியுடன் மோதிர விரல் நுனியை சேர்த்து வைக்க வேண்டும். மற்ற மூன்று விரலகள் நீட்டி இருக்க வேண்டும். இடது கை பெருவிரல் நுனியுடன் நடுவிரல் நுனியை சேர்த்து வைக்க வேண்டும். மற்ற மூன்று விரலகள் நீட்டி இருக்க வேண்டும்.
 
முழங்கால் மூட்டு வலி, இடுப்பு வலி, மணிக்கட்டு மற்றும் சிறு மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கங்களைக் குறைக்கும் மூட்டுகளில் தேங்கும் வாயுவே வலி வரக்காரணம். அதிகப்படியான வாயுவைக் குறைத்து வலியைக் குறைக்கும்.
 
அதிக தூரம் நடப்பவர்கள், மலையேறுபவர்கள் நின்று கொண்டே வேலை பார்ப்பவர்கள் போன்றோர் சந்தி முத்திரை செய்ய உடனடியாக வலி குறையும். இடுப்பு எலும்பு தேய்மானம், சவ்வு விலகல், ஈரப்பசை குறைதலுக்கு சிறந்த பலன் அளிக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments