Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர்கள்; தர்ம அடி கொடுத்த இளைஞர்கள்

Webdunia
புதன், 23 மார்ச் 2016 (16:28 IST)
கல்லூரி சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை கடத்தி செல்ல முயன்ற இருவரை அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் தர்ம அடி கொடுத்த காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
 

 
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் அராலி செட்டியார்மடம் வடக்கு பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் ஒருவர், யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு சென்றுவிட்டு வீடு செல்வதற்காக பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார்.
 
அன்று விடுமுறை தினம் என்பதால், அப்பகுதியில் மக்கள் நடமாற்றம் குறைவாக இருந்துள்ளது. இந்த நிலையினை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட இரண்டு இளைஞர்களும் அந்த பெண் ஏறிய பேருந்திலேயே ஏறியுள்ளனர்.
 
இதனையடுத்து அந்த பெண்ணை இளைஞர்கள் இருவரும் வலுக்கட்டாயமாக பஸ்ஸில் இருந்து இறக்கியுள்ளனர். பின்பு, அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏற்றியுள்ளனர். அந்த பெண் அவ்விரு இளைஞர்களிடமிருந்து தப்பித்துச் செல்ல முயற்சித்துள்ளார்.
 
அப்போது ஒரு இளைஞர் அந்த பெண்ணை தலையில் பலமாக தாக்கியுள்ளார். நினைவிழந்த நிலையில் இருந்த அந்த பெண்ணின் தலையில் தலைகவசத்தை அணிவித்து அப்பகுதியிலிருந்து நவாலி பகுதியை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளனர்.
 
இந்நிலையில் நினைவு திரும்பிய யுவதி தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். இதன்போது அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் ஒன்றுதிரண்டு மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து விரட்டி சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிள் நவாலி வளுக்கையாறு பகுதியில் எரிபொருள் இன்றி இடைநடுவே நின்றுள்ளது.
 
அப்போது பின்தொடர்ந்து வந்த இளைஞர்களிடம் அந்த இரண்டு இளைஞர்களும் வசமாக சிக்கினர். இதனையடுத்து இளைஞர்களினால் அந்த பெண் மீட்கப்பட்டதுடன் இரு இளைஞர்களையும் வட்டுக்கோட்டை காவல் துறையினரிடம் ஒப்படைத்திருந்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

Show comments