Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க்கை கழட்டாமலேயே சாப்பிடும் அதிசய பெண் – வைரலாகும் வீடியோ!

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (14:21 IST)
கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்ததில் மக்கள் மாஸ்க்குகள் அணியாமல் எங்கும் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஆனால் மாஸ்க்குகளை தொடர்ந்து அணிவதால் சில குறைகளும் ஏற்படுகின்றன. நீண்ட நேரம் மாஸ்க் அணியும் போது தண்ணீர் தாகம் எடுத்தாலோ அல்லது ஏதேனும் நொறுக்குத்தீனி திண்ண வேண்டும் என்றாலோ அதற்கான வாய்ப்புகள் இல்லை. இதனால் மாஸ்க்குகளைக் கழட்டி பின்னர் மீண்டும் அணிய வேண்டும். ஆனால் அதில் ரிஸ்க் அதிகம்.

இதனால் மாஸ்க் அணிந்தபடியே சாப்பிடுவது எப்படி என்று பிரிட்டிஷ் மாடல் எம்மா லூயிஸ் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளார். அதன் படி மூக்கை மறைக்கும் படி மேல் முகத்தில் ஒரு மாஸ்க்கும், தாடையை மறைக்கும் படி கீழே ஒரு மாஸ்க்கும் அணிந்துள்ளார். வாயை மூடி இருக்கும்போது இந்த இரு மாஸ்க்குகளும் சேர்ந்து வாயை மூடிக் கொள்கின்றன. அவர் வாயைத் திறந்து சாப்பிடும்போது மாஸ்குகள் விலகிக் கொள்கின்றன.

இதனால் மாஸ்க்குகளை அவிழ்க்காமலேயே சாப்பிட மற்றும் தண்ணீர் குடிக்க முடியும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு.. முதல் விவசாய பொருளுக்கு கிடைத்த பெருமை..!

அடுத்த கட்டுரையில்
Show comments