Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை.?

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (12:44 IST)
இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கலாமா? வேண்டாமா? என அமெரிக்கா ஆலோசனை செய்து வருவதாக தகவல். 

 
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.
 
துவக்கம் முதலே உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா. அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில் பொருளாதார தடையை விதித்ததற்காக ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தினால் எதிர்கொள்ள தயார் எனவும் அமெரிக்காவில் உள்ள ரஷ்யாவின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் எனவும் அதிபர் ஜோ பைடன் அதிரடியாக தெரிவித்தார். 
 
இந்நிலையில் இந்தியாவிற்கு எஸ்- 400 ஏவுகணை தடுப்பு அமைப்பி திட்டமிட்டபடி வழங்கப்படும் என ரஷ்யா நேற்று இந்தியாவுக்கு உறுதியளித்தது. இதனால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கலாமா? வேண்டாமா? என அமெரிக்கா ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments