அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த கலவரம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், நடப்பு அதிபர் ட்ரம்பை விட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும் அவரது வெற்றியை ஏற்றுக் கொள்ளாமல் அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.
இதனிடையே அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப் – ஜோ பிடன் ஆதரவாளர்கள் இடையே வன்முறையும் வெடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று அமெரிக்கா நாடாளுமன்றத்திற்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து போராட்டம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் பலியான நிலையில் நெரிசலில் சிக்கி மேலும் மூவர் உயிரிழந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.