Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க கம்பெனியை தொழிலாளர்கள் வசமே ஒப்படைக்கும் வெனிசுலா

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (19:30 IST)
அமெரிக்க கிம்பர்லி கிளார்க் நிறுவனத்தின் தொழிற்சாலையை அரசே ஏற்றுக் கொண்டுள்ள வெனிசுலா அரசு, அந்த தொழிற்சாலையை தொழிலாளர்கள் வசமே ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவித்திருக்கிறது.
 

 
வெனிசுலாவில் அத்தியாவசியப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவால் வெனிசுலாவின் வருமானம் குறைந்தது. இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
 
இந்நிலையில் உற்பத்தி மற்றும் வினியோகத்தை மேம்படுத்துவது மற்றும் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவது ஆகிய நடவடிக்கைகளுக்கான புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
இதன் ஒருபகுதியாகவே, அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான கிம்பர்லி கிளார்க்கின் தொழிற் சாலையை அரசே எடுத்துக்கொண்டு விட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பல பொருட்களை உற்பத்தி செய்து வந்த இந்தத் தொழிற்சாலை, அந்தத் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் வசமே ஒப்படைக்கப்படவுள்ளது.
 
இதுபோன்ற பல்வேறு தொழிற்சாலைகளை அரசே எடுத்துக் கொள்வது புதிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். உணவு மற்றும் மருந்துகளின் வினியோகத்தை முறைப்படுத்தி, பற்றாக்குறையிலிருந்து வெளியில் வருவதற்குத் தேவையான பணிகளை ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ முடுக்கி விட்டிருக்கிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நாளை முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும்”..!

தீ மிதி விழாவில் தவறிவிழுந்த பெண் பக்தர் காயம்: சென்னை அருகே பரபரப்பு..!

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் எத்தனை.? - விவரங்களை கேட்கும் உச்சநீதிமன்றம்.!!

பிரியாணியில் செத்து கிடந்த பல்லி..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5-பேர் மருத்துவமனையில் அனுமதி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments