Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியை பிளந்து கொண்டு வந்த ராட்சத தண்ணீர் (வீடியோ இணைப்பு)

பூமியை பிளந்து கொண்டு வந்த ராட்சத தண்ணீர் (வீடியோ இணைப்பு)

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (17:10 IST)
பூமிக்கடியில் போடப்பட்ட ராட்சத குடிநீர் குழாய் வெடித்தால் தண்ணீர் எப்படி பொங்கி சிதறும் என்பதற்கு உதாரணமாக ஒரு வீடியோ இணையத்தில் வருகிறது. தண்ணீரை கட்டுப்படுத்த முடியாது என்பதற்கும், அதன் வலிமைக்கும் இது உதாரணமாக உள்ளது.


 
 
கடந்த 2004-ஆம் ஆண்டு கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுனாமி உருவாகியது. கடல் பொங்கி கட்டுப்படுத்த முடியாத வீரியத்துடன் ஊருக்குள் புகுந்து பல உயிர்களை காவு வாங்கியது. தண்ணீரின் சக்தி மிகவும் பலமானது.
 
இதே போல உக்ரைன் நாட்டில் பூமிக்கடியில் போடப்பட்டிருந்த ராட்சத குடிநீர் குழாய் திடீரென வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராட்சத குழாய் வெடித்ததும் தண்ணீர் பூமியை பிளந்து, போடப்பட்டிருந்த தார் ரோட்டையும் உடைத்து கல், மண்ணுடன் சிதறுகிறது.

 

 
 
அந்த ராட்சத குடிநீர் குழாய் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்ததால் உயர் அழுத்தத்தால் அது வெடித்து சிதறியிருக்கலாம் என கூறப்படுகிறது. தண்ணீர் பூமியை பிளந்து சிதறும் காட்சி அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
 
தார் சாலை பிளந்து நீர் மற்றும் மண் பயங்கரமாக வெளியேறும் அந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த காட்சியில் தண்ணீர் மற்றும் மண் பயங்கர ஆக்ரோஷத்துடன் வெளியேறியதால் அருகில் இருந்த வீடுகளும், கார்களும் சேதமடைந்தன.

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments