Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா., பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு தடை: அதிர்ச்சி தகவல்..!

Siva
புதன், 2 அக்டோபர் 2024 (18:09 IST)
இஸ்ரேல் நாட்டிற்குள் ஐநா பொதுச் செயலாளர் நுழைய தடை என அறிவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவாக தெரிவித்துள்ள நிலையில், ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ்  இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போரை தவிர்க்க முயற்சி எடுத்து வருகிறார்.
 
இந்த நிலையில், ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் ஆளுமை இல்லாதவர் என்றும், அவர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாகவும், இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்து உள்ள நிலையில், ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் அதனை கண்டிக்கவில்லை என்றும், எனவே இஸ்ரேல் மண்ணில் அவர் காலடி எடுத்து வைக்க உரிமை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
ஹமாஸ் கொலைகாரர்களை இதுவரை பயங்கரவாத அமைப்பாக ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் அறிவிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக காங்கிரஸ் பாத யாத்திரைக்கு அனுமதி மறுப்பு: போலீசாருடன் செல்வபெருந்தகை வாக்குவாதம் ..!

99 ரூபாய் மதுவிற்பனை திடீர் ஒத்திவைப்பு.. ஆந்திர அரசு அதிரடி முடிவு..!

முதல்முறையாக உதகையில் மின்சார படகு அறிமுகம்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

கல்வித்துறை பணியாளர்கள் 32,500 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை: ராமதாஸ் கண்டனம்..!

ஒன்றரை வருடங்களுக்கு பின் மீண்டும் இயங்கிய செந்தில் பாலாஜி இன்ஸ்டா பக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments