Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மக்கள் செத்தா நீங்கதான் காரணம்! – நேட்டோ நாடுகளை வறுத்தெடுத்த ஜெலன்ஸ்கி!

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (10:20 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உதவ வராத நேட்டோ நாடுகள் மீது அதிபர் ஜெலன்ஸ்கி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் நிதியுதவி, ஆயுதங்கள் வழங்கினாலும் உக்ரைனுக்கு ஆதரவாக நேராக போரில் ஈடுபடவில்லை. பல பகுதிகளில் உக்ரைன் மக்களே ஆயுதம் தாக்கி ரஷ்யா ராணுவத்தை எதிர்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் உதவ வராத நேச நாடுகள் மீது கடும் விமர்சனம் வைத்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி “இன்று முதல், உயிரை இழக்கப்போகும் அனைத்து உக்ரேனிய மக்களுக்கான காரணம், நீங்கள் மட்டுமே. உங்கள் பலவீனத்தாலும் உங்கள் ஒற்றுமை இன்மையாலும் தான், மக்கள் உயிரிழக்க போகிறார்கள். வெறும் 50 டன் டீசலை உங்களால் உக்ரைனுக்கு வழங்க முடிந்துள்ளது. அதை வைத்து நாம் "Budapest குறிப்பாணையை" வேண்டுமானால் எரிக்கலாம்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் “உக்ரைன் மீது குண்டுவீசுவதற்கு NATO நாடுகளே பச்சைக் கொடி காட்டுகிறது. நீங்கள் உக்ரைனின் வான்வெளியை மூடியிருக்கலாம். உங்களால் யாரைப் பாதுகாக்க முடியும்? நீங்கள் உண்மையில் NATO-வில் உள்ள உறுப்பினர்களையாவது பாதுகாப்பீர்களா? என்று கூட தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments