Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேற வாய்ப்பு

Webdunia
வியாழன், 2 ஜூன் 2016 (16:56 IST)
ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறிவிடலாம் என்பதற்கு ஆதரவான கருத்து இங்கிலாந்து மக்களிடம் உருவாகி வருவதாக இரண்டு கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
 

 
ஐரோப்பிய யூனியனில் உறுப்பு நாடாக இருக்கும், இங்கிலாந்து அதில் தொடர்ந்து நீடிப்பதா, வேண்டாமா என்று பொது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பிரதமர் கேமரூன், இந்தப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். அவரது கட்சியும் இதற்கு உடன்பட்டது.
 
ஜூன் 23 ஆம் தேதி இந்த வாக்கெடுப்பு நடக்கப் போகிறது. கடந்த ஆண்டில், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கு இங்கிலாந்து மக்களிடம் ஆதரவு இல்லை என்று தகவல்கள் வெளியாகின. தற்போதைய கருத்துக் கணிப்புகளில் அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
கார்டியன் நாளிதழ் நடத்திய கருத்துக்கணிப்பு மே 27 முதல் 29 ஆம் தேதி வரையில் நடத்தப்பட்டது. இதில் 52 சதவிகிதம் பேர் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறி விடலாம் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 48 சதவிகிதம் பேர் ஐரோப்பிய யூனியனில் தொடரலாம் என்று கூறியுள்ளனர்.
 
தங்கள் கருத்துக் கணிப்பு பற்றிப் பேசிய மார்ட்டின் பூன், தொலைபேசி மூலமாக எடுத்த கருத்துக்களும், ஆன் லைனில் எடுத்தவையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கணிப்பையே தந்துள்ளன என்கிறார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments