Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிடாபியின் நிலைதான் கிம்முக்கும்: யார் அந்த கிடாபி?

Webdunia
வெள்ளி, 18 மே 2018 (13:53 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கிம் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி மலேசியாவில் சந்திக்க இருப்பதாக தகவல் உறுதியானது. இதனை அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தினார். 
 
இந்த சந்திப்பு சில நிபந்தனைகளுடன் நடக்கும் என தெரிகிறது. ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதில் இரு நாடுகளுக்கும் சம்மந்தம் இல்லாததால், இந்த சந்திப்பு தத்தாகும் என தெரிகிறது.
 
அணு ஆயுதத்தை மொத்தமாக கைவிடும்படி அமெரிக்கா கூறினால் இந்த சந்திப்பை ரத்து செய்வேன் என வடகொரியா அதிபர் கிம் எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தது. 
 
இந்நிலையில், இது குறித்து டிரம்ப் கூறியிருப்பதாவது, அணு ஆயுதங்களை அழிக்கும் ஒப்பந்தத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் கடாபி நிலைதான் வடகொரிய அதிபர் கிம்முக்கு ஏற்படும் எச்சரித்துள்ளார்.
 
மேலும், அவர் கூறியதாவது, அணு ஆயுத அழிப்புக்கு வடகொரியா அதிபர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது முதன்மையானது. இதற்கு கிம் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் லிபியா அதிபர் கடாபிக்கு ஏற்பட்ட நிலைதான் கிம்முக்கு ஏற்படும். 
 
கடாபியின் அழிவை எடுத்து கொள்ளுங்கள். நாங்கள் அவரை அழிக்க அங்கு சென்றோம். ஒப்பந்தத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் அந்த நிலை மீண்டும் ஏற்படும். ஆனால் ஒப்பந்தத்துக்கு சம்மதித்துவிட்டால் கிம் சந்தோஷமாக இருப்பார் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments