Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானியர்களை விரைவில் சந்திப்பேன்: டிரம்ப்!

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2018 (15:27 IST)
கடந்த 2015 ஆம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் இருந்த ஒபாமா, ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். 
இந்த ஒப்பந்தத்தில் அணு சக்தி ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என ஈரான் உறுதியளித்தது. இதன் பின்னர் ஈரான் மீது விதித்திருந்த பொருளாதார தடைகள் நீக்கப்பட்டன.
 
ஆனால், டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தம் முட்டாள்தனமானது என விமர்சித்து ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. அதனை தொடர்ந்து ஈரான் மீது பொருளாதார தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டது. 
 
இதனால், அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இருநாட்டு அதிபர்கள் மிரட்டல், எச்சரிக்கை விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். 
 
இந்நிலையில், டிரம்பிடம் ஈரான் விவகாரம் குறித்து கேட்ட போது,  எனக்கு சந்திப்பில் நம்பிக்கை உள்ளது. நான் ஈரானியர்களை சந்திக்கவே விரும்புகிறேன். அதுதான் நமது நாட்டுக்கு, உலகிற்கும் நல்லது. அதில் எந்த நிபந்தனையும் இல்லை. ஈரான் அதிபர் என்னை சந்திக்க விரும்புனால் நான் நிச்சயம் அவரை சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments