Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசர அவசரமாக சீனாவுக்கு ஸ்பெஷல் விமானத்தை அனுப்பிய டிரம்ப்: ஏன் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 26 ஜனவரி 2020 (18:12 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் அவசர அவசரமாக ஒரு சிறப்பு விமானத்தை சீனாவிற்கு அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா என்ற வைரஸ் பயங்கரமாக தாக்கி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு 52 பேர் பலியாகி இருப்பதாகவும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
இதனை அடுத்து அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் தூதரக அதிகாரிகளை உடனடியாக திரும்ப அழைக்க அமெரிக்க அதிபர் முடிவு செய்துள்ளார். இதனால் சிறப்பு விமானம் ஒன்றை அவர் சீனாவுக்கு அனுப்பி அது அதில் அமெரிக்க அதிகாரிகள் அனைவரையும் திரும்ப அழைத்து விட்டதாக கூறப்படுகிறது 
 
தற்போது அவர்களுக்கு தீவிரமான மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்றால் மட்டுமே அமெரிக்காவுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஒருவேளை கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
அமெரிக்காவை அடுத்து இன்னும் சில நாடுகளும் தங்களது தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது ஹாங்காங் போராட்டம், வர்த்தகப்போர் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கி இருக்கும் சீனா, தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலால் தீர்க்க முடியாத தலைவலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments