ட்ரம்ப் விதித்த வரியால் இந்தியாவின் வளர்ச்சியில் சிறு சரிவு! - ஆசிய வளர்ச்சி வங்கி!

Prasanth K
புதன், 1 அக்டோபர் 2025 (11:22 IST)

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளால் இந்தியாவின் வளர்ச்சில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

 

ஆசிய வளர்ச்சி வங்கியின் தகவல்களின்படி, இந்தியாவின் 2025-26 முதல் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.8 சதவீதமாக பதிவாகியுள்ளது. ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது விதித்துள்ள 50 சதவீத வரி காரணமாக ஆண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சி குறையும் என கணிக்கப்படுகிறது.

 

மேலும் அடுத்த 2026-27 நிதியாண்டின் இந்தியாவின் வளர்ச்சியானது கணிக்கப்பட்ட 6.8 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க வரியால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் குறைந்தாலும், சேவை ஏற்றுமதி வலுவான நிலையில் தொடரும் என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரில் பதுங்கிய புஸ்ஸி ஆனந்த்? சல்லடை போட்டு தேடும் தனிப்படை!

கரூர் மரணங்களுக்கு விஜய்தான் முதல் காரணம்! - சீமான் பகிரங்க குற்றச்சாட்டு!

வன்முறையாக மாறிய Gen Z போராட்டம்! 3 பேர் பலி! - மொராக்கோவில் அதிர்ச்சி!

கரூர் கூட்ட நெரிசல்: சி.பி.ஐ. விசாரணை கோரிய பா.ஜ.க. கவுன்சிலரின் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது!

இருமல் மருந்தால் 6 குழந்தைகள் பலி! தமிழக மருந்து நிறுவனத்தில் சோதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments