Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோ பைடன் வெற்றி ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது: தோல்வியை ஏற்க டிரம்ப் மறுப்பு

Webdunia
ஞாயிறு, 8 நவம்பர் 2020 (07:47 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரும் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது என டிரம்ப் தரப்பு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இது குறித்து டிரம்ப் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ’ஜோபைடன் வெற்றி பெற்றதாக ஊடகங்கள் தான் தவறாக சித்தரித்து வருவதாகவும், உண்மையை மறைக்கவே இவ்வாறான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது 
 
தேர்தல் முடிவடைய இன்னும் நிறைய காலம் உள்ளது என்றும், எந்த ஒரு மாகாணத்திலும் இன்னும் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கவில்லை என்றும் குறிப்பாக முக்கிய மாகாணங்களில் தேர்தல் வழக்குகள் நடந்து கொண்டிருப்பதால் சட்ட போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஜோபைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது சட்டவிரோதம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
 
மேலும் திங்கட்கிழமைக்கு மேல்தான் நீதிமன்றங்களின் உத்தரவைப் பொறுத்து யார் வெற்றி பெற்றார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும், இந்த தேர்தல் நடைமுறை மற்றும் மக்கள் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதால் டிரம்ப் தான் வெற்றிபெறுவார் என்று அறிவிக்கப்படும் என தாங்கள் நம்புவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments