Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6.7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு ஏலம்!

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (23:09 IST)
உலகில் பல கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய  விலங்கு டைனோசர். இந்த டைனோசர் பற்றிய சினிமா சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த டைனோசர் பற்றிய செய்திகளுக்கோ, மர்மங்களுக்கோ முடிவேயில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.


உலகின் சில பகுதிகளில் டைனோசர் முட்டைகள், எலும்புகள் உள்ளிட்டவை அகழ்வாய்வு மூலம் கண்டறியப்பட்டு வருகிறது. இவை பத்திரமாக ஆராய்ச்சி மற்றும் அருங்காட்சியங்களில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த  நிலையில்,சுமார் 6.7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு சுவிட்சர்லாந்து நாட்டில் அடுத்த மாதம் ஏலத்திற்கு வருகிறது.

இந்த எலும்புக்கூடு டிரினிட்டி என்று அழைக்கப்படுகிறது.  இந்த டைனோசர் எலும்புக்குடு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி சுவிட்டசர்லாந்தின் சூரிச்சில் ஏலம் விடப்படவுள்ளதாக பிரபல ஏல நிறுவனமான கொல்லர் தெரிவித்துள்ளது.

இந்த டி-ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூடு ரூ.70 கோடிக்கு ஏலம் போகலாம் என  கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments