Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போகும் இடமெல்லாம் குரானை எரித்த நபர்! கொடூரமாக சுட்டுக் கொன்ற கும்பல்!

Prasanth Karthick
வியாழன், 30 ஜனவரி 2025 (15:39 IST)

ஸ்வீடனில் குரானை பல இடங்களில் தொடர்ந்து எரித்து வந்த நபரை சிலர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வட துருவத்தை ஒட்டியுள்ள ஸ்வீடன், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் சிரியா, ஈராக்கில் இருந்து அகதிகளாக சென்ற மக்கள் பலரும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நாடுகளில் மத அடிப்படைவாதத்திற்கு எதிரான குரல்கள் அதிகமாக உள்ள நிலையில் அவ்வபோது மத எதிர்ப்பாளர்களுக்கும், நம்பிக்கை உள்ளவர்களுக்குமான மோதல்கள் நடக்கிறது.

 

ஸ்வீடனில் வாழ்ந்து வந்த ஈராக்கை சேர்ந்த சல்வான் மொமிகா என்ற ஈராக்கிய கிறிஸ்தவர், பல போராட்டங்களில் இஸ்லாமிய புனித நூலான குரானை எரிப்பதை வாடிக்கையாக செய்து கொண்டிருந்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் அவ்வாறி மசூதிக்கு வெளியே குரானை எரித்ததற்காக அவர் மீது பல இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில் அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

 

அந்த வழக்கில் இன்று சல்வான் மொமிகாவுக்கு தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக மர்ம நபர்கள் சிலர் மொமிகாவை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். அதனால் அவருக்கு இன்று வழங்கப்பட இருந்த தீர்ப்பு (அவர் இனவெறுப்பை தூண்டும் குற்றவாளியா? என தீர்ப்பு அளிக்க இருந்தது) பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments