Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுடன் உடலுறவு வைத்த பள்ளி ஆசிரியை கைது....

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2017 (17:07 IST)
அமெரிக்காவில் உள்ள பள்ளியின் ஆசிரியை அங்கு படிக்கும் மாணவர்களுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
அமெரிக்காவின் ஓஹியோ எனும் இடத்தில் உள்ள ஒரு இடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் மட்லின் மார்க்ஸ். இவர் 17 வயது மாணவர் ஒருவருடன் கடந்த ஜூன் மாதம் உடலுறவில் ஈடுபட்டதும், 16 வயது மாணவருடன் கடந்த செப்டம்பர் மாதம் உறவில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், இவர் தனது நிர்வாண புகைப்படங்களை பல மாணவர்களுக்கு அனுப்பி, செக்ஸ் வலையில் வீழ்த்தியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மாணவனின் செல்போனில் மட்லினின் நிர்வாணப் புகைப்படத்தைக் கண்ட தந்தை ஒருவர் பள்ளி நிர்வாகம் மற்றும் போலிசாரிடம் அளித்த புகாரின் பின்னணியில் இந்த விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. அந்த நாட்டு சட்டப்படி சிறுவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும். 
 
இதையடுத்து மட்லின் மார்க்ஸை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவருக்கு 40 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்