Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்பிக்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கட்டிப்புரண்டு சண்டை.. ரணகளமான பாராளுமன்ற கூட்டம்..!

Mahendran
சனி, 18 மே 2024 (12:37 IST)
தைவான் நாட்டின் பாராளுமன்ற கூட்டம் இன்று நடைபெற்ற போது பெண் எம்பிக்கள் உள்பட எம்பிக்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கட்டிப்புரண்டு சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தைவான் நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில் சீன ஆதரவு பெற்ற கோமின் டாங் என்பவரை எதிர்த்து போட்டியிட்ட வில்லியம் சிங் என்பவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் அவருக்கு ஆட்சி அமைக்க தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை 
 
இந்த நிலையில் பாராளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இது குறித்து விவாதம் இன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது வாக்களிப்பதற்கான நேரம் வந்தபோது திடீரென ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது 
 
இதில் பெண் எம்பிக்கள் உள்பட பல எம்பிக்கள் கட்டி புரண்டு சண்டை போட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்த மோதலை தடுக்க வந்த காவலர்களும் சண்டையில் ஈடுபட்டதால் சில எம்பிக்கள் வெளியேற்ற முயன்றதாகவும் சில எம்பிகளுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஒரு எம்பி புதிதாக தாக்கல் செய்யப்பட இருந்த மசோதாவை பறித்துக் கொண்டு வெளியே ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments