Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரம் – நாளை அனைத்துக் கட்சி கூட்டம் !

Webdunia
வியாழன், 25 ஏப்ரல் 2019 (09:02 IST)
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து அதிபர் மைத்ரிபால சிறிசேன அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாளை நடத்த இருக்கிறார்.

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  தாக்குதலுக்கு இதுவரை 359 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். மேலும் 500 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனால்  இலங்கையில் அவசரநிலை பிரகரனப்படுத்த இருப்பதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

தீவிரவாத தாக்குதல் குறித்த உளவுத்துறை அளித்த தகவல்களை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் யாருமே என்னிடம் எதுவும் கூறவில்லை என்றும் அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.இதனால் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அனைவரும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புத்துறை முழுவதுமாக சீரமைக்கப்படும் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து நாளை காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த இருக்கிறார் இலங்கை அதிபர். அதையடுத்து நாளை மாலை  4 மணிக்கு சர்வசமயக் கூட்டமும் நடக்க இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை: பள்ளிகள் விடுமுறையா?

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கைதான ஞானசேகருக்கு மாவுக்கட்டு..!

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments