Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'இலங்கை ஹிட்லர் தேசம் அல்ல' - சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

Webdunia
புதன், 1 ஜூலை 2015 (21:53 IST)
இலங்கை ஹிட்லர் தேசம் அல்ல. கொலை செய்து கொண்டு, ஊழல் செய்து கொண்டு இருக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
 
நீர் கொழும்பில் இன்று புதன் கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் கூறுகையில், ”ஜனவரி 8ஆம் தேதிக்கு பின் முக்கியமான நபர்கள் வாழக்கூடிய நாடாக இலங்கையை மாற்றி புது சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளோம். முடிந்த போன சந்தர்ப்பத்தை மீண்டும் அழைத்து அழிவுக்குச் செல்ல முயற்சிக்கின்றனர்.
 
குற்றம் செய்தால் சட்டம், நீதிமன்றம் சரியாக செயற்பட்டால் இன்று பிரதமர் பதவி கேட்பவர்கள் என பலர் சிறையில் இருப்பர். அப்படி செய்யாது ’ஐயோ பாவம்’ என்று அவர்களுக்கு அமைதியாக இருக்க இடமளித்துள்ளோம். அப்படி இருந்தால் பிரச்சினை இல்லை.
 
அப்படியானவர்களுக்கு மீண்டும் அதிகாரத்தை கொடுக்க நினைப்பது மக்களின் எதிர்பார்ப்புக்களை தூக்கி நிலத்தில் அடிப்பதற்கு ஒப்பாகும். எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் தவறு செய்தால் சிறை செல்ல வேண்டும். வீடு சென்று வாயை மூடிக் கொண்டு இருக்கவும் வேண்டும். அரசியல் தலைவர் ஒருவரிடம் இருக்க வேண்டிய முக்கிய பண்பு அது.
 
அதைவிடுத்து தினமும் இதில் தொங்கிக் கொண்டு அட்டை போல இரத்தம் குடிப்பதற்கு அல்ல. இலங்கை ஹிட்லர் தேசம் அல்ல. கொலை செய்து கொண்டு, ஊழல் செய்து கொண்டு இருக்க முடியாது. அதனால்தான் 9 வருட குறுகிய காலத்தில் மக்கள் அணிதிரண்டு வீட்டுக்கு விரட்டி அடித்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

Show comments