Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் சீனக் கடல் விவகாரம் குறித்த ஒபாமாவின் பேச்சு: சீனா மறுப்பு

Webdunia
புதன், 28 ஜனவரி 2015 (08:22 IST)
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின், தென் சீனக் கடல் விவகாரம் குறித்த பேச்சுக்கு சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தென் சீனக் கடல் விவகாரம் குறித்துப் பேசுகையில், “ஆசிய பசிபிக் பகுதியில், கடல் பயண சுதந்திரம் நிலை நிறுத்தப்பட வேண்டும்.
 
பிரச்சினைகள் சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும், இதில் இந்தியாவின் மிகப்பெரிய பங்களிப்பை அமெரிக்கா வரவேற்கும்” என்று கூறினார்.
 
இந்நிலையில், ஒபாமா கூறிய கருத்து குறித்து பீஜிங்கில் சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
அதந்தக் கேள்விக்குப் பதிளளித்து அவர் கூறுகையில், “தற்போது தென் சீனக் கடல் பகுதியில் பொதுவாக ஸ்திரமான நிலை உள்ளது. சீனாவுக்கும், ‘ஆசியான்’ நாடுகளுக்கும் இடையே கருத்தொற்றுமை உள்ளது.
 
தென் சீனக் கடல் பகுதியில் அமைதியையும், ஸ்திரத் தன்மையையும் நாங்கள் கூட்டாக பாதுகாப்போம். கடல் பயணத்திலோ, விமான பயணத்திலோ எந்த பிரச்சினையும் இல்லை. எதிர்காலத்திலும் இருக்காது என்று கூறினார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments