Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறு வயதில் பெற்றோருக்கு அறிவுரை வழங்கிய சிறுமி (வீடியோ)

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (17:29 IST)
விவாகரத்தான தனது பெற்றோர்களை நல்ல நண்பர்களாக இருக்குமாறு ஆறு வயது சிறுமி அறிவரை வழங்கிய வீடியோ இணையதளத்தில் மிகவும் பிரபலம் ஆகி உள்ளது. 


 
டியானா என்ற ஆறு வயது குழந்தை விவாகரத்தான தனது பெற்றோருக்கு பெரிய மனுஷி போல் அறிவுரை வழங்கியுள்ளது. இதை டியானாவின் தாய் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவை, யூடியூப்-பில் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

வீடியோவில் பேசிய டியானா “அம்மா, நீங்களும் தந்தையும் பிரச்சனையை மறந்துவிட்டு நல்ல நண்பர்களாக மாற வேண்டும். நீங்கள் மட்டும் அல்ல, உலக மக்கள் அனைவரும் நண்பர்களாக இருக்க வேண்டும். அது தான் நல்லது. நான் இனிமையானவளாக இருக்க முடியும் என்றால் அனைவராலும் அப்படி இருக்க முடியும் என நம்புகிறேன்.
 
அனைவரும் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறேன். எல்லோர் முகத்திலும் புன்னகையை பார்க்க விரும்புகிறேன். மனிதர்கள்களிடம் மனிதநேயம் ஒழிந்துவிட்டால் வருங்காலத்தில் உலகில் மனிதர்களே இருக்க மாட்டார்கள் என்று அந்த சிறுமி பேசியிருக்கிறார்.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு..
 

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

Show comments