Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னா மனுசன்யா! சரக்கை நிறுத்தி சானிட்டைசர் செய்ய தொடங்கிய வார்னே!

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (17:20 IST)
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் தனது மது ஆலையில் ‘ஜின்’ தயாரிப்பதை விடுத்து சானிட்டைசர் தயாரிக்க தொடங்கியுள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே.

கொரோனா பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள கை, கால்களை சானிட்டைசர் அல்லது ஆல்கஹால் கலந்த சோப் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு முதற்கொண்டு மருத்துவ நிபுணர்கள் வரை அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ள சூழலில் சானிட்டைசருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பல இடங்களில் சானிட்டைசர் விலை அதிகமாக விற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தனது மதுபான ஆலையில் ‘ஜின்’ பானத்தை தயாரிப்பதற்கு பதிலாக மக்களுக்கு அவசிய தேவையாக உள்ள சானிட்டைசரை தயாரிக்க தொடங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து சானிட்டைசர்கள் தயாரிக்க உள்ளூர் நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் விடுத்த அழைப்பின் பேரில் ஷேன் வார்னேவின் நிறுவனமும் சானிட்டைசர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய ஷேன் வார்னே “ஆஸ்திரேலியா தற்போது மிகப்பெரும் சவாலை எதிர்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறைக்கு உதவும் வகையில் இந்த முயற்சி மேற்கொண்டுள்ளோம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments