Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் குழுவின் மூத்த அதிகாரி பலி

Webdunia
சனி, 14 அக்டோபர் 2023 (13:21 IST)
கடந்த சனிக்கிழமை ( அக்டோபர் 7) பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு, தெற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக ஹமாஸ் ஆக்கிரமிப்பு பகுதியான காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறது.

இருதரப்பினர் இடையே தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். மக்கள், உணவு, இருப்பிடம், நீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதுவரை 3 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாகவும், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

8 வது நாளாக நடைபெற்று வரும் போரில்  காசாவில் ஒரே இரவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹமாஸ் குழுவின் மூத்த அதிகாரி உயிரிழந்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், ஹமாஸ் குழுவின் தலைமையகம் மற்றும் கமாண்டோ படைகளுக்குச் சொந்தமான தளங்கள் மீது  இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஹமாஸின் மூத்த தலைவர் முராத் அபு முராத் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் படையினர் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments