Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2700 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடல் மட்டம் உயர்வு : அறிஞர்கள் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2016 (13:45 IST)
உலகின் பல ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக புவி அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.


 
 
கடல் மட்டம் குறித்த ஆய்வை நடத்தி வரும், அமெரிக்காவின் புவி அறிவியல் ஆராய்ச்சிதுறையில் பணியாற்றும் ராபர்ட் கூப், கார்லிங் ஹே, எரி மாரோ மற்றும் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜெர்ரி மிட்ரோவிகா ஆகியோர் சமீபத்தில் அவர்கள் ஆய்வை சமர்பித்தனர்.
 
அந்த ஆய்வில் “கடந்த 2700 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிக அளவில்  கடல் மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக, 1900 முதல் 2000 ஆண்டு வரை 14 செ.மீ, அளவுக்கு கடல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதற்கு மனிதர்களால் ஏற்படும் உலக வெப்பமயமாதலே காரணம்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
இப்படியே சென்றால், அது பேரழிவில் முடியும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். அதேசமயம் பூமி 0.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்போது கடல் மட்டம் 1000 முதல் 1400 இன்ச் வரை குறைகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments