Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவிடம் பணிந்த சவுதி: அப்படி என்ன செய்தார் டிரம்ப்?

Webdunia
சனி, 6 அக்டோபர் 2018 (17:40 IST)
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன் ஈரானுடனான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் உள்ள மீத உலக நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. 
 
ஈரானை தனிமைப்படுத்த, அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. இதனால் ஈரானில் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் முடங்கியுள்ளது. ஈரானின் பொருளாத நிலையும் மோசமாகி வருகிறது. 
 
ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் இழப்பை ஈடுகட்ட, சவுதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கூடுதலாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என டிரம்ப் கேட்டுக்கொண்டார். 
 
ஆனால், இதனை சவுதி அரேபியா முதலில் மருஇத்தது. பின்னர் டிரம்ப், அமெரிக்கா இல்லாமல் இரண்டு வாரங்களுக்கு கூட சவுதி அரேபிய மன்னரால் பதவியில் நீடிக்க முடியாது என சவால் விட்டார். 
 
இதனையடுத்து அமெரிக்காவின் மிரட்டலுக்கு சவுதி அரேபியா பணிந்துள்ளது. மேலும், ஈரான் கச்சா எண்ணெய் இல்லாததால் ஏற்படும் இழப்புகளை இனிமேல் சவுதி அரேபியா ஈடுகட்டும் என அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments