Webdunia - Bharat's app for daily news and videos

Install App

35 ஆண்டுகள், 93 கொலைகள்.. அலறவைத்த கொலைகாரன்

Arun Prasath
வியாழன், 10 அக்டோபர் 2019 (14:34 IST)
35 ஆண்டுகளில் 93 பெண்களை கொலை செய்ததாக ஒரு கொடூர கொலைகாரன் ஒப்புக்கொண்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் குத்துச் சண்டை வீரரான சாமுவேல் லிட்டில், கடந்த 2012 ஆம் ஆண்டு போதை பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவரை விசாரித்த போது, மரபணு சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் 1987 ஆம் ஆண்டிலிருந்து 1989 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 3 பெண்களை அவர் கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

மேலும் சில சந்தேக கொலைகள் குறித்து விசாரணை நடத்தியதில், 1970 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரையில் 93 கொலைகளை தாம் செய்துள்ளதாக சாமுவேல் ஒப்புக்கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கொலை செய்த பெண்களில் கறுப்பின பெண்களும், பாலியல் தொழில் மற்றும் போதைக்கு அடிமையான பெண்களுமே அதிகம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்