Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீவ்வில் இருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம்..! – ரஷ்யா அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (15:15 IST)
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் கீவ்வில் இருந்து மக்கள் வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.

ரஷ்ய ராணுவம் உக்ரைன் தலைநகர் கீவ்வில் தீவிர தாக்குதலை நடத்தி வந்தது. இந்நிலையில் இன்று பெலாரஸில் உக்ரைன் – ரஷ்யா இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனால் கீவ்வில் ரஷ்யா போர் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

மேலும் கீவ்வில் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் கீவ்வில் இருந்து கீவ் – வாசில்கிவ் நெடுஞ்சாலை வழியாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த பாதை மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையா? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

இனி எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லாது: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments