Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவிடம் இருந்து வருகிறது 3.50 மில்லியன் கச்சா எண்ணெய் பேரல்!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (07:30 IST)
ரஷ்யாவில் இருந்து 3.50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா விரைவில் கையெழுத்திட இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்தியாவுக்கு சலுகை விலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் தர இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இது குறித்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாகவும் கச்சா எண்ணெய்யை சரக்கு கப்பல்கள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பையும் அதற்கான காப்பீட்டையும் ரஷ்யாவே ஏற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 100 டாலருக்கும் குறைவாக இருக்கும் நிலையில் ரஷ்யாவிலிருந்து 3.50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வரவிருப்பதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் மாறாக குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments