Webdunia - Bharat's app for daily news and videos

Install App

99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் முழு சூரிய கிரகணம் - எச்சரிக்கும் நாசா

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2017 (10:09 IST)
99 ஆண்டுகளுக்கு பிறகு வானில் ஒரு  முழு சூரிய கிரகணம் தோன்ற உள்ளது. அதை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என நாசா மையம் அறிவுறுத்தியுள்ளது.


 

 
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, சந்திரனின் பகுதி சூரியனை விட பெரிதாக காட்சியளிக்க கூடிய அளவு பூமிக்கு அருகில் வர வேண்டும். அப்படி இருந்தால், அதுவே சூரிய கிரகணம். அது அமாவாசை அன்றுதான் ஏற்படும். இந்த கிரகணம் மனிதர்களிடம் ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருக்கிறது.
 
முக்கியமாக கர்ப்பிணி பெண்களை இது பாதிக்கும் எனவும், ஆன்மீக ரீதியாக கூறப்படும் போது, சாப்பிடக்கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது, வீட்டில் சமையல் செய்யக்கூடாது, நகம் வெட்டக்கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 
இந்நிலையில் வருகிற ஆகஸ்டு 21ம் தேதி வானில் முழு சூரிய கிரகணம் தோன்றவுள்ளது என நாசா அறிவித்துள்ளது. சூரியனை நிலவு முழுவதும் மறைத்து 3 நிமிடங்கள் வரை இந்த கிரகணம் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 99 ஆண்டுகளுக்கு பின் தோன்றும் இந்த முழு சூரிய கிரகணம் அரிதான ஒன்று என நாசா கூறியுள்ளது. 
 
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக சில அறிவுரைகளை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த கிரகணத்தின் போது சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும். எனவே, இதனை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளித் தடுப்புக் கண்ணாடி அணிந்துதான் பார்க்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
 
இந்த கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி பேர் பார்க்க முடியும் என நாசா கூறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments