Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடை முதல் தேசிய கீதம் வரை பல மாற்றங்கள்… ராணி எலிசபெத் மரணம்!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (16:18 IST)
ராணி எலிசபெத் மரணத்திற்கு பிறகு பிரிட்டன் அரசமைப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்னவென தெரிந்துக்கொள்ளுங்கள்…


இங்கிலாந்தின் மகாராணியாக கடந்த 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்தவர் இரண்டாம் எலிசபெத். 96 வயதான ராணி எலிசபெத் தற்போது உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். உலகிலேயே அதிக காலம் அரியணையில் வீற்றிருந்த மகாராணி என்று ராணி எலிசபெத் சாதனை படைத்துள்ளார். நேற்று மாலை 4.30 மணியளவில் மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்துள்ளார்.

இவரின் மரணத்திற்கு பிறகு பிரிட்டன் அரசமைப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்னவென தெரிந்துக்கொள்ளுங்கள்…
ALSO READ: ராணி எலிசபெத் சொத்து மதிப்பு எவ்வளவு? அரியணை ஏறும் சார்லஸுக்கு சொத்து கிடைக்குமா?
  1. காமன்வெல்த்தில் மாற்றங்கள்:
ராணி எலிசபெத் காமன்வெல்த் தலைவராக இருந்தார். இது ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பசிபிக் ஆகிய 54 நாடுகளை உள்ளடக்கியது. அவரது மரணத்திற்குப் பிறகு, காமன்வெல்த் தலைவர் பதவி தானாக ராணியின் வாரிசுக்கு வழங்கப்படாது. ஆனால் காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்களால் கூட்டாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.
  1. துக்க நிலையில் இங்கிலாந்து:
இங்கிலாந்தில் சட்டப்பூர்வ விடுமுறை இருக்கும்.  இங்கிலாந்து மற்றும் வெளிநாடுகளில் இறுதிச் சடங்கு நடைபெறும் வரை அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும். இறுதிச் சடங்கு நடைபெறும் நாளில் லண்டன் பங்குச் சந்தை மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
  1. பணம் மற்றும் நாணயங்கள்:
இங்கிலாந்தில், அனைத்து பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள் ராணியின் முகத்தை சித்தரிக்கின்றன. ஆனால் இப்போது அவரது மரணத்தைத் தொடர்ந்து, புதிய நாணயங்களும் பணமும் அரசரின் முகத்துடன் உருவாக்கப்படும். பின்னர் புதிய பணம் தயாரிக்கப்பட்டு பொது புழக்கத்தில் விநியோகிக்கப்படும், பழைய பணம் படிப்படியாக அகற்றப்படும்.
  1. முத்திரைகள்:
இங்கிலாந்தின் ராயல் மெயில் நாடு முழுவதும் உள்ள மிகப்பெரிய அஞ்சல் சேவையாகும். இதிலும் ராணியின் படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அனைத்து அஞ்சல் பெட்டிகளிலும் உள்ள சைஃபர் மாற்றப்படும். புதிதாக உருவாக்கப்பட்ட எந்த ஒரு சைஃபரும் புதிய கிங் தேர்ந்தெடுத்த சைபர் இடம்பெறும். 
  1. சீருடைகள்:
ராணியின் சைஃபர் UK-ல் போலீஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் அணியும் சீருடைகள் உட்பட பல சீருடைகளில் மாற்றம் தோன்றும். இந்த சீருடைகள் புதிய கிங்ஸ் சைஃபர் மூலம் காலப்போக்கில் புதுப்பிக்கப்படும்.
  1. தேசீய கீதம்:
காட் சேவ் தி குயின் என்ற வரிகளுடன் ராணியின் நினைவாக பிரிட்டிஷ் தேசிய கீதம் பாடப்பட்டது. இது ஆண் மன்னருக்கான பதிப்பிற்குத் திரும்பும், அதாவது காட் சேவ் தி கிங், வார்த்தைகளுக்குள் உள்ள பிரதிபெயர்கள் ஆண் பதிப்பிற்கு மாற்றப்படும். தேசிய கீதத்தின் இந்த பதிப்பு கடைசியாக 1952 இல் ஜார்ஜ் VI அரியணையில் இருந்தபோது பயன்படுத்தப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments