Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோத்தபய ராஜபக்சேவை நேரில் சென்று சந்தித்த அதிபர் ரணில்..

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (20:41 IST)
கோத்தபய ராஜபக்சே தங்கியுள்ள வீட்டிற்கு அதிபர் ரணில் சென்று அவரை சந்தித்துப் பேசினார்.  இது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் சில மாதங்கள் முன்னதாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் உணவுப் பொருட்களுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டது. பெட்ரோல், கியாஸ், உணவுப் பொருட்கள் விலை விண்ணை தொட்டது.. இதனால் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் அரசியல்வாதிகள் பலரின் வீட்டை தீக்கிரையாக்கினர்.

 
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிபர் மாளிகையும் தாக்கப்பட்ட நிலையில் அவர் இலங்கையிலிருந்து தப்பி மாலத்தீவு, சிங்கப்பூர் சென்று அங்கிருந்து தாய்லாந்தில் அடைக்கலமானார்.

பின்னர் இலங்கையில் அதிபராக ரணில் விக்ரமசிங்கெ பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையில் நிலைமை கட்டுப்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கை சென்றடைந்தார்.

தற்போதும் மக்கள் அத்தியாசியப் பொருட்களுக்குப் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் குறைக்க வேண்டுமென மக்கள்  கொழும்பு கலிமுகத்திடலில்  , அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில்,  முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பாதுகாக்கும் பனியில் ராணுவ வீரர்கள் வீட்டில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பாதுகாப்பிற்கு அதிபர் ரணில் பல நவடிக்கைகள் எடுத்து வருவதாக அவர் ஈது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில்,  கோத்தபய ராஜபக்சே தங்கியுள்ள வீட்டிற்கு அதிபர் ரணில் சென்று அவரை சந்தித்துப் பேசினார்.  இது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் நாட்டில் பொருளாதார நிலையில், அரசியல் சூழல் ஆகியவற்றைப் பற்றி பேசியதாகத் தெரிகிறது.

மேலும் அதிபர் ரணில் தலைமையில், விரைவில் 12 அமைச்சர்கள் பொறுப்பேகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பொருள்கள் விலை குறையாததால் மீண்டும் போராட்டம் வெடிக்கலாம் எநக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments