Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளியறையில் பிணமாக கிடந்த கர்ப்பிணி பெண்: அதிர வைக்கும் காரணம்...

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (17:03 IST)
பிரான்ஸில் 21 வயதான 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் குளியலறையில் பிணமாக கிடந்த சம்பவமும், அதற்கான காரணமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பிரான்ஸில் Grenoble என்ற பகுதியில், கணவருடன் வசித்து வந்திருக்கிறார் அந்த பெண். குறித்த நாளன்று வேலை முடிந்து வீடு திரும்பிய கணவர் கதவை பல முறை தட்டியபோதும் மனைவி திறக்காததால், கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார்.
 
அப்போது, அவரது மனைவி குளியலறையில் மயங்கிய நிலை காணப்பட்டுள்ளார். இதனால், விரைவாக தனது மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளார். அதே சமயம் போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளார். 
 
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரோடு வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக இறந்துள்ளது. இது குறித்து போலீஸார் முதற்கட்ட விசாரணையை நடத்தியுள்ளனர். 
 
அந்த விசாரணையின் முடிவில், அப்பெண் மயங்கி விழுந்த இடத்திற்கு அருகே அவரது செல்போன் சார்ஜிங் நிலையில் இருந்துள்ளது. இதனால், மின்சாரம் தாக்கி அப்பெண் இறந்திருக்களாம் என கூறப்பட்டுள்ளது. 
 
இதேபோல், கடந்த ஆண்டு குளியலறையில் பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடந்த போது, இதே போல் மொபைல் சார்ஜிங்கில் இருந்ததால்தான் மரணமடைந்தார் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments