Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்களோடு எண்ணெய் கப்பலை கடத்திய கொள்ளையர்கள்!

Webdunia
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (18:13 IST)
ஆப்பிரிக்காவில் எரிபொருள் எண்ணெய் எடுத்து சென்ற கப்பலையும் 20 இந்திய ஊழியர்களையும் கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியிலுள்ள கினியா வளைகுடாவில் எண்ணெய் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்திருக்கிறது. காலை 7 மணி அளவில் திடீரென கப்பலின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கப்பலில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட 20 இந்தியர்களும் இருந்துள்ளனர்.

இதுகுறித்து கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ள செய்தியில் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து கப்பல் குறித்த தகவல்களை விசாரித்து வருவதாகவும், கொள்ளையர்களால் கப்பல் மற்றும் ஊழியர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நைஜீரிய கடல் எல்லையில் இதேபோன்று ஒரு கப்பல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: தேதியை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..!

அதானி, மணிப்பூர் விவகாரங்களை எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள்: மக்களவை ஒத்திவைப்பு..!

வங்கதேசத்தில் மத ரீதியிலான ஒடுக்குமுறை - ஜனநாயக நாடுகளின் வழி அல்ல! - இஸ்கான் துறவியின் கைதுக்கு சத்குரு கடும் எதிர்ப்பு!

கரையை கடக்கும் முன்பே ஃபெங்கல் புயல் வலுவிழக்கும்..? - வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

மதியம் 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments