Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒவ்வொரு ராணுவ வீரரும் 3 பெண்களை கற்பழிக்கும் திறமை பெற்றவர்கள். அதிபரின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு

Webdunia
திங்கள், 29 மே 2017 (06:36 IST)
ஒரு நாட்டில் உள்ள பெண்களுக்கு முழு பாதுகாப்பு கொடுத்து அவர்களை ஆண்களுக்கு சமமாக, ஆண்களை விட பலமுள்ளவர்களாக மாற்ற வேண்டிய பொறுப்பு ஆள்பவர்களுக்கு உண்டு. குறிப்பாக அந்த நாட்டின் பிரதமர் அல்லது அதிபருக்கு அதிக பொறுப்பு உண்டு. ஆனால் ஒரு நாட்டின் அதிபரே பெண்கள் குறித்து கீழ்த்தரமான கருத்து ஒன்றை கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.



 


சமீபத்தில் ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூட்டரெட் பேசியபோது, '''எங்கள் நாட்டு ராணுவத்தினர் ஒவ்வொருவரும் 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு வலிமை பெற்றவர்கள்'' என்று கூறியுள்ளார். அதிபரின் இந்த கருத்துக்கு பிலிப்பைன்ஸில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள பெண்கள் அமைப்புகள் கண்டித்து வருகின்றன.

ராணுவ வீரர்களின் பெருமையை கூற எத்தனையோ வழிகள் இருக்கும்போது கேவலமான இதுபோன்ற உதாரணங்கள் தான் கூற வேண்டுமா? என்று கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்