Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனிலவுக்கு சென்ற தம்பதியின் அந்தரங்கத்தை வீடியோ எடுத்து மிரட்டும் கார் டிரைவர்!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2016 (12:54 IST)
துபாய்க்கு தேனிலவுக்கு சென்ற இந்திய தம்பதியர் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க காட்சியை செல்போனில் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
இந்தியாவை சேர்ந்த தம்பதியர்கள் தேனிலவுக்காக துபாய் சென்றனர். அங்கு அவர்கள் லிமோசின் என்ற கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து ஊர் சுற்றினர். அவர்களின் காரை பாகிஸ்தானை சேர்ந்த ஒரு டிரைவர் ஓட்டியுள்ளார் அவருக்கு வயது 28.
 
தம்பதியர்கள் காரில் இருக்கும் போது நெருக்கமாக இருந்துள்ளனர். புதுமண தம்பதியர்கள் உணர்ச்சிவசப்பட்டு மேலும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனை பாகிஸ்தானை சேர்ந்த அந்த கார் டிரைவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
 
பின்னர் அந்த வீடியோவை கணவருக்கு அனுப்பி மிரட்டியுள்ளார் டிரைவர். உன் மனைவியை என்னுடன் அனுப்ப வேண்டும் அல்லது 36 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என கூறியுள்ளார்.
 
உடனடியாக அந்த தம்பதியினர் இது குறித்து காவல் துறையில் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பாகிஸ்தானை சேர்ந்த டிரைவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.64ஐ நெருங்கியதா?

விண்ணை பிளக்கும் ‘அரோகரா’ கோஷம்; பழனியில் கட்டண தரிசனம் ரத்து! - குவியும் பக்தர்கள்!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

டெல்லி தேர்தல் முடிவுகள் பீகாரிலும் எதிரொலிக்குமா? தேஜஸ்வி யாதவ் கருத்து..!

எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லாமல் அதிமுக விழா! புறக்கணித்த செங்கோட்டையன்! - எடப்பாடியாருக்கு எதிராக போர்க்கொடி?

அடுத்த கட்டுரையில்
Show comments